இந்த பக்கத்தில்
நியூசிலாந்து பாதுகாப்பு புலனாய்வு சேவை (NZSIS) வெளிநாட்டு தலையீட்டை ஒரு வெளிநாட்டு அரசின் செயலாக வரையறுக்கிறது, இது பெரும்பாலும் பதிலாள் (ப்ராக்ஸி proxy) மூலம் செயல்படுகிறது, இது நியூசிலாந்தின் தேசிய நலன்களை ஏமாற்றும், ஊழல் அல்லது வற்புறுத்தல் மூலம் செல்வாக்கு, சீர்குலைத்தல் அல்லது சீர்குலைக்கும் நோக்கம் கொண்டது. இயல்பான அரசு சார்ந்த செயல்பாடு, ஆதரவு தேடல் மற்றும் செல்வாக்கைப் பெறுவதற்கான பிற உண்மையான, வெளிப்படையான முயற்சிகள் தலையீடு என்று கருதப்படுவதில்லை.
இந்த தகவல் தாளில் "வெளிநாட்டு அரசு" என்பது நியூசிலாந்தைத் தவிர பிற நாட்டை குறிக்கிறது. நியூசிலாந்திற்கு வெளியே உள்ள நாடுகளைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது.
வெளிநாட்டு தலையீடு இன சமூகங்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை பாதிக்கிறது
வெளிநாடுகள் தங்கள் சொந்த இலக்குகளை அடைய நியூசிலாந்தில் தலையிட முயற்சிக்கும் போது அது வெளிநாட்டு தலையீடு ஆகும். இந்த வெளிநாட்டு அரசுகள் நியூசிலாந்தின் சமூகம், ஈடுபாடுகள் மற்றும் நடத்தைகளை கட்டுப்படுத்தவும், மாற்றவும் விரும்புகின்றன. அவர்கள் அதிக செல்வாக்கையும் கட்டுப்பாட்டையும் பெறுவதற்காக இதைச் செய்கிறார்கள்.
வெளிநாட்டு தலையீடு நியூசிலாந்தின் சுதந்திரம், ஜனநாயகம், பொருளாதாரம், நற்பெயர் மற்றும் சமூகங்களை சேதப்படுத்துகிறது. நியூசிலாந்தில் உள்ள இன சமூகங்கள் வெளிநாட்டு அரசுகளிடமிருந்து தேவையற்ற கவனத்தைப் பெறலாம், இதனால் அவர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணரலாம் மற்றும் அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கு தீங்கு விளைவிக்கலாம். நாடுகளுக்கு இடையிலான இயல்பான அரசு சார்ந்த நடவடிக்கைகள் வெளிநாட்டு தலையீடு அல்ல.
இன சமூகங்களுக்கு வெளிநாட்டு தலையீடு எப்படி ஏற்படும்?
இன சமூகங்களால் அனுபவிக்கப்படும் வெளிநாட்டு தலையீட்டை பார்ப்பதற்கு கடினமாக இருக்கும். ஒரு வெளிநாட்டு அரசினால் செய்யப்படும் வெளிநாட்டு தலையீடு நடவடிக்கைகள் அல்லது நியூசிலாந்தில் அவர்களுக்காக யாரோ ஒருவரால் செய்யப்படும் வெளிநாட்டுத் தலையீடுகளுக்கான உதாரணங்கள் இங்கே இருக்கின்றன:
- சமூகங்கள் அல்லது சமூக அமைப்புகள்/குழுக்களை கட்டுப்படுத்தவும் மிரட்டவும் முயற்சி செய்தல்
- சமூகங்களை துன்புறுத்துவதற்கும், மிரட்டுவதற்கும் மற்றும் அவர்களின் செயல்களை கட்டுப்படுத்துவதற்கும் அதிகாரப்பூர்வ ஆவணங்களை செயல்படுத்த அல்லது வழங்க மறுத்தல்
- சமூகங்களையும் அவர்களின் செயல்களை துன்புறுத்துவதற்கும், அச்சுறுத்துவதற்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்கும் நியூசிலாந்தில் உள்ள மக்களின் விசாக்கள், கடவுச்சீட்டுகள் அல்லது பிற அதிகாரப்பூர்வ ஆவணங்களை எடுத்துச் செல்லுதல் அல்லது எடுத்துச் செல்வதாக அச்சுறுத்துதல்
- நியூசிலாந்தில் உள்ள மக்களை அல்லது வெளிநாட்டில் வாழும் அவர்களது குடும்பங்களை அச்சுறுத்துதல் (சமூக ஊடகங்கள் மூலம் அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல் உட்பட)
- மக்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களின் சொந்த நாட்டிற்கு திரும்ப கட்டாயப்படுத்துதல்
- அங்கீகரிக்கப்படாத கண்காணிப்பு மற்றும் மக்களை அச்சுறுத்த அல்லது மிரட்டுவதற்காக ஒரு வெளிநாட்டு அரசால் இன சமூகத்தை கண்காணித்தல்
- குறிப்பிட்ட குழுக்கள் அல்லது சமூகங்களை அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களைப் பயன்படுத்தி வெளிநாட்டு அரசின் கருத்துக்களில் இருந்து வேறுபட்ட கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வதிலிருந்து தடுக்க முயற்சித்தல்
- ஒரு வெளிநாட்டு அரசு ஏற்காத கருத்துக்கள் அல்லது நம்பிக்கைகளை மக்கள் வெளிப்படுத்துவதைத் தடுப்பதற்காக நியூசிலாந்தில் நிகழும் நிகழ்வுகளைத் தடுக்க முயற்சி செய்தல்
- நியூசிலாந்தில் உள்ள சமூகத்திற்கு ஒரு வெளிநாட்டு அரசிடமிருந்து அச்சுறுத்தல்களை அனுப்புதல்
- தேர்தல்கள் மற்றும் பிற ஜனநாயக செயல்முறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை மாற்ற முயற்சித்தல்
இந்த பொருளடக்கம் NZSIS இன் 2024 அறிக்கையிலிருந்து தழுவப்பட்டது: நியூசிலாந்தின் பாதுகாப்பு அச்சுறுத்தல் சூழல்