இந்த பக்கத்தில்
இணைய பாதுகாப்பு எனக்கு ஏன் முக்கியம்?
இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் தகவல்களைப் பகிரவும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கவும் உதவும் அற்புதமான தளங்கள் ஆகும்.
இருப்பினும், குற்றவாளிகள் மற்றும் பிற சட்டவிரோத நிறுவனங்கள் உங்கள் பணத்தையும், உங்கள் தகவல்களையும் பெறுவதற்கு அல்லது உங்களை மிரட்டுவதற்கு அவற்றைப் பயன்படுத்துகின்றன.
அவர்கள் உலகில் எங்கிருந்தும் செயல்பட முடியும், பெரும்பாலான மொழிகளை சரளமாகப் பேச முடியும் மற்றும் நம்பத்தகுந்த போலி இணையதளங்களை உருவாக்க முடியும். அவர்கள் மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் மற்றும் குறுஞ்செய்தி மூலம் உங்களைத் தொடர்புகொள்வார்கள், மேலும் அவர்கள் நீங்கள் தெளிவாக சிந்திக்காமல் இருப்பதற்காக உங்களை பயமாகவோ அல்லது கவலையாகவோ உணர வைக்க முயற்சிப்பார்கள்.
இவை அனைத்தும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் தந்திரங்களை எப்போதும் அறிந்திருக்க வேண்டும் என்பதாகும்.
நான் ஆன்லைனில் சந்திக்கும் சில பொதுவான பிரச்சினைகள் என்ன?
இவைகள் நாம் காணும் மிக பொதுவான சூழ்நிலைகளில் சில.
- ஒரு இணைப்பைக் கிளிக் செய்யும்படி சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தியைப் பெறுவீர்கள்.
- இந்த இணைப்புகள் பெரும்பாலும் உங்கள் உள்நுழைவு அல்லது நிதி விவரங்களை திருட ஏதுவாக வடிவமைக்கப்பட்ட போலி இணையதளங்களுக்கு செல்ல வழிவகுக்கும்.
- தனிப்பட்ட தகவலைக் கேட்கும் ஒரு சந்தேகத்திற்கிடமான அழைப்பைப் பெறுவீர்கள்.
- மேலே குறிப்பிட்டுள்ளபடி, அழைப்பாளர் உங்கள் வங்கியில் இருந்து அழைப்பதுபோல் பாவனை செய்து தகவல் கேட்பார்.
- அதிகாரம் உள்ள நபரை போன்று நடித்து, உங்களை ஏதாவது செய்ய வைக்க முயற்சிக்கும் ஒருவரிடமிருந்து நீங்கள் தகவல்தொடர்பை பெறுவீர்கள்.
- பெரும்பாலும் அந்த நபர் ஒருவித அச்சுறுத்தலை ஏற்படுத்துவார்.
- யாரோ ஒருவர் உங்களின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆன்லைன் கணக்குகளில் நுழைவார் (உதாரணமாக: மின்னஞ்சல் அல்லது சமூக ஊடகம்).
- யாராவது ஒருவர் உங்கள் ஆன்லைன் கணக்கிற்குள் நுழைந்தால், அவர்களால் உங்கள் தகவலைத் திருடவும், பணம் செலுத்தலை அவர்கள் கணக்கிற்கு திருப்பிவிடவும் முடியும். மேலும் அவர்கள் உங்களைப் போன்று நடித்து உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரைக் குறிவைக்கலாம்.
- உங்கள் கிரெடிட் கார்டு விவரங்கள் திருடப்படும் அல்லது போலியான விற்பனை அல்லது முதலீட்டில் உங்கள் பணத்தை இழந்து விடுவீர்கள்.
- மோசடி செய்பவர்கள் நீங்கள் ஒரு நல்ல ஒப்பந்தம் என்று நம்பி சிந்திக்காமல் பணம் செலுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறார்கள். அல்லது ஒரு உண்மையான இணையதளம் தரவு முறிவில் சிக்கி உங்கள் விவரங்கள் ஆன்லைனில் கசியலாம்.
இன்னும் பல சூழ்நிலைக்காட்சிகள் இங்கே உள்ளன: இப்போது உதவி பெறவும் - உங்களுடைய ஆன்லைனை உங்களுடையதாக்குங்கள்
நான் ஆன்லைனில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
- நீண்ட மற்றும் தனிப்பட்ட கடவுச்சொற்கள் (passwords)
- கடவுச்சொல் எவ்வளவு நீளமாக இருக்கிறதோ அவ்வளவு வலிமையானது.
- நான்கு தொடர்பற்ற சொற்களை ஒன்றாக இணைத்து 16 எழுத்துகளுக்கு மேல் உள்ள நினைவில் வைக்கத்தக்க ஒரு கடவுச்சொல்லை உருவாக்கவும் (உதாரணமாக: TriangleRhinoOperationShoes). தேவைப்பட்டால் எண்கள், பெரிய எழுத்துக்கள் மற்றும் குறியீடுகளை சேர்க்கவும் (உதாரணமாக: Triangle&"Rhino"Operation2Shoes).
- முக்கியமாக, பயன்படுத்திய கடவுச்சொற்களை மீண்டும் பயன்படுத்த வேண்டாம். ஒரு குற்றவாளி உங்கள் கடவுச்சொற்களில் ஒன்றைப் பெற்றால், அவர்கள் அதை உங்களுடைய மற்ற கணக்குகளிலும் பயன்படுத்த முயற்சி செய்வார்கள்.
- வலிமையான கடவுச்சொற்களை உருவாக்கவும் - உங்களுடைய ஆன்லைனை உங்களுடையதாக்குங்கள்
- இரண்டு-காரணி உறுதிப்படுத்துதலை ஆன் செய்து வையுங்கள்.
- இது ஒரு கூடுதல் தகவலாகும் - பொதுவாக உங்கள் தொலைபேசியில் உள்ள குறியீடு - நீங்கள் இணையதளத்தில் உள்நுழைய தேவைப்படும்.
- இந்த நுட்பம் நம்பமுடியாத அளவிற்கு வலிமையானது மற்றும் உங்கள் கணக்குகளில் நுழைவதற்கான பெரும்பாலான முயற்சிகளை தடுக்கலாம்.
- நாங்கள் ஒரு 'உறுதிப்படுத்துதல் செயலியை' இது ஆதரிக்கப்படும் இடத்தில் பயன்படுத்த பரிந்துரைக்கிறோம்.
- இரண்டு-காரணி உறுதிப்படுத்துதலை (2FA) அமைக்கவும் - உங்களுடைய ஆன்லைனை உங்களுடையதாக்குங்கள்
- ஆன்லைனில் தனிப்பட்ட முறையில் இருங்கள்
- சமூக ஊடகங்களில் பாதுகாப்பாக இருப்பதற்கான சிறந்த வழி உங்கள் தனியுரிமை அமைப்புகளை ஆன் செய்யுங்கள்.
- இது சீரற்ற மக்கள், இணைய குற்ற இயல்புள்ளவர்கள் உட்பட அனைவரையும் உங்கள் இடுகைகளை பார்ப்பதிலிருந்தும் அல்லது உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதிலிருந்தும் தடுக்கும்.
- ஆன்லைனில் உங்கள் தனி உரிமையை பாதுகாக்கவும் - உங்களுடைய ஆன்லைனை உங்களுடையதாக்குங்கள்
- எல்லாவற்றையும் புதுப்பித்த நிலையில் வைத்திருங்கள்.
- உங்கள் தொலைபேசி, கணினி அல்லது மென்பொருளை புதுப்பிக்கும் போது, இது உங்கள் பாதுகாப்பில் ஏதாவது குறைபாடு இருந்தாலும் சரி செய்து விடும்.
- குற்ற இயல்புள்ளவர்கள் எப்போதும் உள்ளே நுழைவதற்கான வழிகளைத் தேடுகிறார்கள் மேலும் இந்த புதுப்பிப்புகள் பாதிப்புகளை சரிசெய்கிறது.
- தொடர்ந்து புதுப்பியுங்கள் - உங்களுடைய ஆன்லைனை உங்களுடையதாக்குங்கள்
- எப்போதும் கவனமாக இருங்கள்
- சிறந்த ஆலோசனை என்னவென்றால், இந்த மோசடிகளைப் பற்றி விழிப்புடன் இருங்கள், மற்றும் குற்ற இயல்புள்ளவர்கள் ஏதேனும் ஆன்லைன் தளங்களில் உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்தால், அவற்றைக் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
- ஏதேனும் தவறாகத் தோன்றினால், உங்களைத் தொடர்பு கொண்ட நபருடன் தொடர்பு கொள்ளாதீர்கள். குறிப்பாக அவர்கள் நட்பாகத் தோன்றினாலும், அவர்கள் பணம் கேட்டால் எச்சரிக்கையாக இருங்கள்.
- வித்தியாசமான இணைப்புகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் இருக்கின்றனவா என்று பாருங்கள் (உதாரணமாக: உங்கள் வங்கி ஜிமெயில் (Gmail) கணக்கிலிருந்து மின்னஞ்சல் அனுப்பாது).
- சந்தேகமாக இருந்தால், அந்த நிறுவனத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும் மேலும் உங்களுக்கு அனுப்பப்பட்ட இணைப்புகள் அல்லது தொலைபேசி எண்களைப் பின்தொடர வேண்டாம்.
நான் ஏமாற்றப்பட்டால் அல்லது அதைவிட மோசமாக இருந்தால் நான் என்ன செய்வது?
உதவியை நாட உங்களுக்கு நிறைய இடங்கள் இருக்கின்றன. நீங்கள் உங்களுடைய சம்மதத்தை தெரிவிக்காத வரை, இந்த நிறுவனங்கள் அனைத்தும் உங்கள் விவரங்களை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளாது.
- நீங்கள் CERT NZ போர்டல் மூலம் NCSC-க்கு இணையச் சம்பவங்களைப் புகாரளிக்கலாம், நாங்கள் உங்களுக்கு உதவலாம் அல்லது மற்றொரு நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளலாம்: ஒரு சம்பவத்தை தெரிவிக்கவும் | CERT NZ
- நீங்கள் பணத்தை இழந்திருந்தால், உடனடியாக உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளவும்.
- மோசடி குறுஞ்செய்திகளை, உள்நாட்டு விவகாரத் துறையால் நடத்தப்படும் சேவையான 7726-க்கு இலவசமாக அனுப்பலாம்.